ADDED : செப் 16, 2026 07:24 PM
அ நிறம் | அளவு
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே இளஞ்செம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் உலக ஓசோன் தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தலைமையாசிரியர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். ஓசோன் படலம் நம்மை எவ்விதம் பாதுகாக்கிறது என்பது குறித்தும், காற்று மாசுபடுதல் உள்ளிட்ட பயன்பட்டால் வெளியாகும் வாயுக்களால் ஓசோன் படலத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஓசோன் படலத்தை பாதுகாக்க மாணவர்கள், ஆசிரியர்கள் உறுதிமொழி எடுத்தனர். பள்ளி வளாகத்தில் மரக்கன்று நட்டு வைக்கப்பட்டது. மாணவர்கள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
