/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆடி கார்த்திகை முருகன் கோயில்களில் வழிபாடு
/
ஆடி கார்த்திகை முருகன் கோயில்களில் வழிபாடு
ADDED : ஜூலை 20, 2025 11:03 PM

ராமநாதபுரம்,: ஆடி மாத கார்த்திகையை முன்னிட்டு, ராமநாதபுரத்தில் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு அபிேஷக, பூஜை வழிபாடு, அன்னதானம் நடந்தது.
நேற்று ஆடி கார்த்திகையை முன்னிட்டு, ராமநாதபுரம் குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோயிலில் அபிேஷகம், அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.
இது போன்று ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயில், வடக்கு தெரு முகவை ஊருணி பாலசுப்பிரமணியசுவாமி கோயில், குமராய்யா கோயில், வெளிப்பட்டனம் பாலசுப்பிரமணியம்சுவாமி, பாலதண்டயுதசுவாமி கோயில் மற்றும் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள பட்டணம்காத்தான் வினைதீர்க்கும் வேலவர் கோயில், நீச்சல் குளம் அருகேயுள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் அபிேஷகம், அலங்காரத்தில் பூஜைகள் நடத்து. அன்னதானம் வழங்கபட்டது, பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.-