ADDED : ஜன 20, 2024 04:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: மனநிலை பாதிக்கப்பட்டு சென்னையில் இறந்தவரின் தவறான முகவரியால் போலீசார் குழப்பம் அடைந்தனர்.
சென்னையில் உள்ள மனநல காப்பகத்தில் ரெத்தினம் 43, அனுமதிக்கப்பட்டு சில நாட்களுக்கு முன்பு அவர் இறந்தார். ரெத்தினத்தை காப்பகத்தில் சேர்த்த போது திருவாடானை தினசரி அங்காடி தெரு செல்லம் மகன் ரெத்தினம் என்ற முகவரி கொடுக்கப்பட்டது.
இது குறித்து திருவாடானை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திருவாடானை போலீசார் அந்த முகவரியில் விசாரித்த போது ரெத்தினம் அந்த முகவரியில் வசிக்கவில்லை என தெரிந்தது.
போலீசார் கூறுகையில், காப்பகத்தில் தவறான முகவரி கொடுக்கப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டது. இது குறித்து காப்பகத்திற்கு தகவல் தெரிவித்துவிட்டோம் என்றனர்.