/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சவேரியார் சர்ச் திருவிழா கொடியேற்றம்
/
சவேரியார் சர்ச் திருவிழா கொடியேற்றம்
ADDED : நவ 25, 2025 05:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் புனித சவேரியார் சர்ச் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. மறைவட்ட அதிபர் சிங்கராயர் கொடியேற்றினார். உதவிப் பங்குப்பணியாளர் இனிக்கோ ஆனந்த் முன்னிலை வகித்தார்.
நவ.,28 ஒப்புரவு அருளடையாளம் வழங்கப்படும். திருவிழாத் திருப்பலி, தேர்ப்பவனி டிச.,2 மாலை 6:00 மணிக்கும், திருவிழா நிறைவுத் திருப்பலி டிச.,3 காலை 6:00 மணிக்கும் நடைபெறும்.
நவநாட்களில் மாலை 5:30 மணிக்கு திருஜெபமாலையும், நவநாள் ஜெபமும், மாலை 6:15 மணிக்கு திருப்பலியும் நடைபெறும் என சர்ச் நிர்வாகம் அறிவித்துள்ளது.

