/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வ.மஞ்சள்பட்டிணம் பத்ரகாளியம்மன் கோயிலில் யாகசாலை பூஜை துவக்கம்
/
வ.மஞ்சள்பட்டிணம் பத்ரகாளியம்மன் கோயிலில் யாகசாலை பூஜை துவக்கம்
வ.மஞ்சள்பட்டிணம் பத்ரகாளியம்மன் கோயிலில் யாகசாலை பூஜை துவக்கம்
வ.மஞ்சள்பட்டிணம் பத்ரகாளியம்மன் கோயிலில் யாகசாலை பூஜை துவக்கம்
ADDED : பிப் 09, 2025 04:59 AM

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே வ.மஞ்சள் பட்டிணம் பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நடைபெற்ற யாகசாலை பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
வ.மஞ்சள் பட்டிணம் பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நாளை (பிப்.,10) நடக்கிறது.
இந்நிலையில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று அனுக்ஞை, கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜைகள் துவங்கின.
முன்னதாக யாகசாலை பூஜை பொருட்களுடன் கோயில் நிர்வாகிகள் ஊர்வலமாகச் சென்று லட்சுமி பூஜை, தீப பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகளில் ஈடுபட்டு வழிபாடு செய்தனர்.
இன்று (பிப்.9) இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக சாலை பூஜைகள் நடக்கிறது.
நாளை காலை 9:30 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஹிந்து சத்ரிய நாடார் உறவின்முறை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.