/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
டீசல் மானியத்திற்காக பதிவு செய்து பலஆண்டாக காத்திருப்பு: நாட்டுப் படகுகள் மீனவர்கள் பாதிப்பு
/
டீசல் மானியத்திற்காக பதிவு செய்து பலஆண்டாக காத்திருப்பு: நாட்டுப் படகுகள் மீனவர்கள் பாதிப்பு
டீசல் மானியத்திற்காக பதிவு செய்து பலஆண்டாக காத்திருப்பு: நாட்டுப் படகுகள் மீனவர்கள் பாதிப்பு
டீசல் மானியத்திற்காக பதிவு செய்து பலஆண்டாக காத்திருப்பு: நாட்டுப் படகுகள் மீனவர்கள் பாதிப்பு
ADDED : செப் 30, 2024 04:32 AM
ராமநாதபுரம்: மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட நாட்டுப்படகுகளில் 1500க்கு மட்டுமே டீசல் மானியம் வழங்கப்படுகிறது. பதிவு செய்து பல ஆண்டுகளாகியும் 1900 படகுகளுக்கு டீசல் மானியம் வழங்கவில்லை என மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன் பிடி தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது. ரோஜ் மாநகர் முதல் தொண்டி வரையிலான கடற்கரைப்பகுதியை கொண்ட மாவட்டத்தில் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், மூக்கையூர், தேவிபட்டினம், தொண்டி, ஏர்வாடி, கீழக்கரை, ஆற்றாங்கரை, என மீன்பிடி தொழில் செய்யும் 130க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில் 6200 நாட்டுப்படகுகள் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.
இதில் 3400 நாட்டுப்படகுகள் மட்டுமே முறையாக பதிவு செய்து இயக்கப்பட்டு வருகின்றன. மற்ற படகுகள் ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்டு வருகின்றன.
இதில் தமிழக அரசின் மீன் வளத்துறை சார்பில் 1500 படகுகளுக்கு மட்டுமே மீன் பிடி தொழிலுக்கான மானிய டீசல் வழங்கப்பட்டு வருகிறது. முறையாக பதிவு செய்து 1900 படகுகள் தமிழக அரசின் டீசல் மானியம் பெறுவதற்காக காத்திருக்கும் அவல நிலை உள்ளது.
ஆண்டிற்கு 10 மாதங்கள் மட்டுமே மீன் பிடி தொழில் காலமாகும். மாதத்திற்கு விசைப்படகுக்கு 1800 லிட்டர், ஆண்டுக்கு 18 ஆயிரம் லிட்டரும், நாட்டுப்படகுக்கு மாதம் 4 ஆயிரம் லிட்டர் என ஆண்டுக்கு 40 ஆயிரம் லிட்டர் மானிய விலை டீசல் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு லிட்டருக்கு 16 ரூபாய் அரசு மானியமாக மீனவர்களுக்கு வழங்கி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தின் முக்கிய தொழிலான மீன் பிடி தொழிலுக்கு மீன் வளத்துறையினர் 1900 நாட்டுப்படகுகளுக்கு அரசின் மானிய விலை டீசல் வழங்காமல் பல ஆண்டுகளாக காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
முறையாக பதிவு செய்த அனைத்து நாட்டுப்படகுகளுக்கும் மானிய விலை டீசல் வழங்க அரசு முன் வர வேண்டும், என மீனவர்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழக அரசு மீனவர்களுக்காக வழங்கப்படும் இந்த மானிய விலை குறைந்த அளவு என்றாலும் அதைனை முழுமையாக அனைத்து படகுகளுக்கும் வழங்க வேண்டும், என மீனவர்கள் தரப்பில் தெரிவித்தனர். -----------