/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மண்டபத்தில் கடல் அட்டை இலங்கையில் மஞ்சள் பறிமுதல்
/
மண்டபத்தில் கடல் அட்டை இலங்கையில் மஞ்சள் பறிமுதல்
ADDED : ஏப் 15, 2025 12:49 AM

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 5 லட்சம் மதிப்புள்ள கடல் அட்டைகள் இந்திய கடலோர காவல் படையினராலும், இங்கிருந்து கடத்தி வரப்பட்ட மஞ்சள் இலங்கையிலும் பறிமுதல் செய்யப்பட்டன.
அரிய கடல்வாழ் உயிரிமான கடல் அட்டையை பிடிக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. ஆனால் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட இடங்களில் மீனவர்கள் போர்வையில் கடத்தல்காரர்கள் கடல் அட்டையை பிடித்து மறைவான இடத்தில் பதப்படுத்தி கள்ளதோணியில் இலங்கைக்கு கடத்தி செல்கின்றனர்.
நேற்று மண்டபம் அருகே மன்னார் வளைடா கடலில் ஹோவர்கிராப்ட் கப்பலில் ரோந்து சென்ற இந்திய கடலோர காவல் படை வீரர்கள், வேதாளை கடற்கரையில் கேட்பாற்று கிடந்த மூடையில் கைப்பற்றி சோதனையிட்டனர். இதில் 145 கிலோ கடல் அட்டைகள் இருந்தன. இதன் மதிப்பு ரூ. 5 லட்சம் ஆகும். பறிமுதல் செய்த கடல் அட்டையை மண்டபம் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
மஞ்சள் பறிமுதல்
தமிழகத்தில் இருந்து இலங்கைக்குசமையல்,மருந்து,போதை பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுகின்றன. தமிழகத்திலிருந்து புத்தளம் கடற் பகுதிக்கு கடத்தல் பொருட்கள் வருவதாக கிடைத்த தகவலின்படி இலங்கை கடற்படையினர் அப்பகுதியில் சோதனையில்ஈடுபட்டனர்.
அப்போது நடுக்கடலில் தமிழக நாட்டுப்படகில் இருந்து இலங்கை பைபர் படகுக்கு சமையல் மஞ்சளை மாற்றிக்கொண்டிருந்தனர். கடற்படையினை கண்டவுடன் படகிலிருந்த மஞ்சளுடன் தமிழக நாட்டுப்படகு தப்பி சென்றது.
இலங்கை படகு பிடிபட்டது. படகில் இருந்த 6 பேரை பிடித்த கடற்படையினர் அதிலிருந்த 145 கிலோ மஞ்சளையும் பறிமுதல் செய்தனர்.