/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கிராமங்களில் நடந்த யோகா விழிப்புணர்வு
/
கிராமங்களில் நடந்த யோகா விழிப்புணர்வு
ADDED : ஜூன் 26, 2025 12:57 AM
கீழக்கரை: கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லுாரியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கிராமங்கள் தோறும் யோகா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரியின் செஞ்சுருள் சங்கம் மற்றும் உடற்கல்வித்துறை சார்பில் ஏர்வாடி, இதம்பாடல் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பெண்களிடம் யோகா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஒரே பூமி ஒரே நல வாழ்வு என்ற கருப்பொருளில் இணைய போஸ்டர் உருவாக்கும் போட்டி நடத்தப்பட்டது.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லுாரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
நிகழ்ச்சியில் உனத் பாரத் அபியான் திட்ட அமைப்பினர் மற்றும் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.