/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இ -சேவை மையங்களில் பழகுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்
/
இ -சேவை மையங்களில் பழகுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்
இ -சேவை மையங்களில் பழகுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்
இ -சேவை மையங்களில் பழகுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்
ADDED : மார் 14, 2024 03:26 AM
ராமநாதபுரம்: -வாகன ஓட்டுநர் பழகுநர் உரிமம் பெற இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
பழகுநர் உரிமம் பெற ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளையும், இடைத்தரகர்களையும், தனியார் பிரவுசிங் சென்டர்களையும் அணுகவேண்டிய நிலை உள்ளது. இதில் தேவையற்ற செலவுகள் பொதுமக்களுக்கு ஏற்படுகிறது. இதில் வெளிப்படைத்தன்மை இல்லாமல் உள்ளது.
இந்த சேவைகளை பெறுவதற்கு அருகில் உள்ள நகரங்களுக்கு வரும் நிலை உள்ளது. இதனை தவிர்ப்பதற்கும், புகார்களுக்கு இடமளிக்காத வகையில்மேம்படுத்துவதற்கும், பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகிலேயே இந்த சேவையை கொண்டு சேர்ப்பதற்கும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
முதல்வர் ஆணைப்படியும், போக்குவரத்துத்துறை அமைச்சர் வழிகாட்டுதல் படியும் நாடு முழுவதும் 55 ஆயிரத்திற்கும் அதிகமான இ-சேவை மையங்களில் பழகுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கும் முறை நேற்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இ-சேவை மையங்கள் மூலம் இந்த சேவையைப் பெறுவதற்கு பொதுமக்கள் கூடுதலாக இ-சேவை மையத்திற்குரூ.60 சேவை கட்டணமாக செலுத்த வேண்டும். ஒப்புதல் அளிக்கப்பட்ட பழகுநர் உரிமத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தொடர்ந்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பெறப்படும் ஓட்டுநர் உரிமம், தகுதிச் சான்று, உரிமை மாற்றம் உள்ளிட்டவைகள்
இ-சேவை மையம் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.---------

