ADDED : மே 22, 2025 11:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: சமூகநலத்துறை சார்பில்2025ம் ஆண்டிற்கான சுதந்திர தினவிழாவில் சிறந்த சமூகப் பணியாளர் மற்றும் சிறந்த தொண்டு நிறுவனம் விருதுக்கு பெண்களின் நலன் மேம்பாட்டிற்காக பணிபுரியும் தகுதியான தனி நபர், தொண்டு நிறுவனங்களிடமிருந்து கருத்துருக்கள் வரவேற்கப்படுகிறது.
தங்களது சேவையை முழு விபரங்களுடன் ஜூன் 12க்குள் https://awards.tn.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட சமூகநல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.