/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கிரிக்கெட் அணி தேர்வு தகுதிச்சுற்று போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்
/
கிரிக்கெட் அணி தேர்வு தகுதிச்சுற்று போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்
கிரிக்கெட் அணி தேர்வு தகுதிச்சுற்று போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்
கிரிக்கெட் அணி தேர்வு தகுதிச்சுற்று போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : டிச 16, 2025 05:25 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் இரண்டாம் டிவிஷன் தகுதிச் சுற்று போட்டியில் பங்கேற்க டிச.26க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கிரிக்கெட் சங்க செயலாளர் பிரபாகரன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் முதல் மற்றும் இரண்டாம் டிவிஷன் அணிகள் விளையாடுகின்றன.
இதில் ஒவ்வொரு ஆண்டும் இரண்டாம் டிவிஷனில் பின்தங்கிய கடைசி அணி வெளியேற்றப்பட்டு புதிய அணி சேர்க்கப்படும். புதிய அணி தேர்வு செய்வதற்கான தகுதிச்சுற்றுப் போட்டி விரைவில் நடக்கவுள்ளது.
பங்கேற்க விரும்பும் அணியினர் டிச.26 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். தகுதிச்சுற்றில் நாக்அவுட் முறையில் அணிகள் தேர்வு செய்யப்படும். வெற்றி பெறும் அணி சங்கத்தின் சார்பில் நடைபெறும் போட்டியில் இலவசமாக கலந்து கொள்ள முடியும்.
கூடுதல் விபரங்களுக்கு 81440 89452, 99444 06848 ஆகிய அலைபேசி எண்களை அழைக்கலாம் என்றார்.