/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பசுமை சாம்பியன் விருது பெற விண்ணப்பிக்கலாம்
/
பசுமை சாம்பியன் விருது பெற விண்ணப்பிக்கலாம்
ADDED : மார் 16, 2025 12:23 AM
ராமநாதபுரம்; சுற்றுச்சூழல் பாதுகாப்பு முன்மாதிரியான பங்களிப்பை வழங்கும் தனி நபர்கள், மற்றும் நிறுவனங்கள் பசுமை சாம்பியன் விருது பெற விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் ரூ.1 கோடியில் ஆண்டு தோறும் தனி நபர்கள், அமைப்புகளுக்கு பசுமை சாம்பியன்விருது 100 பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் பண முடிப்பு வழங்கப்படுகிறது.
இதன்படி 2024--25ம் ஆண்டிற்கான பசுமை சாம்பியன் விருதுகளை வழங்கப்பட உள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை சிறப்பாக செயல்படுத்தியநிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்போர் நலச் சங்கங்கள், தனி நபர்கள், உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்சாலைகள் பசுமை சாம்பியன் விருது பெற விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், கலெக்டர் தலைமையில் அமைக்கப்பட்ட பசுமை சாம்பியன் விருது தேர்வு செய்யும் குழு மூலம் தகுதி வாய்ந்த தனி நபர்கள், நிறுவனங்களை தேர்வு செய்யும். இதற்கான விண்ணப்ப படிவத்தை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய இணையதளம் www.tnpcb.gov.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பசுமை சாம்பியன் விருது 2024-க்கான முன்மொழிவை ஏப்.,15க்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், மாசு கட்டுப்பாடு வாரியம், ராமநாதபுரத்தை அலுவலகத்தை அணுகலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துஉள்ளார்.