/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம்
/
கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம்
ADDED : மே 23, 2025 11:38 PM
ராமநாதபுரம்: சமூக நலத்துறை சார்பில் 2025ம் ஆண்டிற்கான சுதந்திர தினவிழாவில் துணிச்சலான செயல் புரிந்தமைக்கான கல்பனா சாவ்லா விருதுக்கு தகுதியான தனி நபர்கள் ஜூன் 15க்குள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
தமிழகத்தில் பிறந்தவராகவும், 18 வயது நிரம்பியவராகவும் இருக்க வேண்டும். அவரை பற்றி ஒரு பக்க அளவிலும், துணிச்சல் மற்றும் துணிச்சலான முயற்சிகளை பற்றியும், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுத வேண்டும். சுய விவரம் மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் விண்ணப்ப படிவத்தை முழுமையாக நிரப்ப வேண்டும். விண்ணப்பதாரரின் சுயரிதை தரவு, தாங்கள் செய்த துணிச்சலான செயல் குறித்த உரிய விவரங்கள் நிழற்படங்கள், விருது பெற்றிருந்தால் அது பற்றிய விபரங்கள், பிறந்த தேதி, கல்வித்தகுதி போன்ற முழு விபரங்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் ஜூன் 15க்குள் கருத்துருவை சமர்பிக்க வேண்டும் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.