/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முதியோர் காப்பகம் அமைக்க விண்ணப்பிக்கலாம்
/
முதியோர் காப்பகம் அமைக்க விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூன் 23, 2025 07:33 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் முதியோர் காப்பகம் அமைக்க ஆர்வமுள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சமூக நலன் மற்றும் உரிமைத்துறையின் கீழ் மாவட்டத்தில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பங்களிப்புடன் செயல்படும் வகையில் முதியோர் காப்பகம் நடத்த விண்ணப்பிக்கலாம்.
தங்களின் தகுதிகள், கருத்துருக்களை ஜூன் 30க்குள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் சமூக நல அலுவலகத்தில் வழங்க வேண்டும்.
மேலும் முதியோர் இல்லம் அமைப்பதற்கான மாநில அரசின் வழிகாட்டுதல் பெற சமூக நல அலுவலகத்தை நேரடியாக அல்லது 04567 - 230 466 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.