/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வெளி மாநிலத் தொழிலாளர்கள்வாரியத்தில் பதிவு செய்யலாம்
/
வெளி மாநிலத் தொழிலாளர்கள்வாரியத்தில் பதிவு செய்யலாம்
வெளி மாநிலத் தொழிலாளர்கள்வாரியத்தில் பதிவு செய்யலாம்
வெளி மாநிலத் தொழிலாளர்கள்வாரியத்தில் பதிவு செய்யலாம்
ADDED : நவ 29, 2024 05:21 AM
ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்தில் கட்டுமானத்தொழிலில் ஈடுபட்டுள்ள வெளிமாநில தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்து பயன்பெறலாம். ராமநாதபுரம் தொழிலாளர் உதவி ஆணையர் சமூகபாதுகாப்பு திட்ட பிரிவு குலசேகரன் கூறியிருப்பதாவது:
மாவட்டத்தில் கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ள வெளி மாநிலத்தவர்கள் நலவாரியத்தில் பதிவு செய்யலாம். குறிப்பிட்ட எண்ணிக்கையில் வெளிமாநிலத் தொழிலாளர்களுடன் கட்டுமான தொழில் நடைபெறும் இடங்களில் சிறப்பு முகாம் அமைத்து பதிவு செய்யப்படும்.
எனவே வெளிமாநில தொழிலாளர்கள் தங்களின் ஆதார் எண்ணுடன் தற்போதைய அலைபேசி எண் இணைக்கப்படாமல் இருந்தால் உடன் இணைக்க வேண்டும்.
நலவாரியத்தில் பதிவு செய்தால் கல்வி, திருமணம், இயற்கை, விபத்து மரணங்களுக்கு நலத்திட்ட உதவிகளை பெறலாம்.
எனவே வெளிமாநில தொழிலாளர்கள் அலுவலகத்திற்கு நேரடியாக வந்தும் பதிவு செய்யலாம் என்றார்.