தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ நீண்ட வாளுடன் ரகளை செய்த வாலிபர் கைது

நீண்ட வாளுடன் ரகளை செய்த வாலிபர் கைது

நீண்ட வாளுடன் ரகளை செய்த வாலிபர் கைது


ADDED : செப் 11, 2026 07:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 11, 2026 07:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் 163 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் நீண்ட வாளுடன் ரகளையில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர். 

ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 2 மாதத்திற்கு பி.என்.எஸ்.எஸ்.,163 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இதனால் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் -தேவிபட்டினம் சாலையில் பஜார் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். மகர் நோன்பு பொட்டல் அருகே நீண்ட வாளுடன் ஒருவர் தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் ராமநாதபுரம் தங்கப்பா நகர் சித்திக் மகன் அசரப் அலி 32, என தெரிய வந்தது. ஆயுத தடுப்பு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். அவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

––

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us