ADDED : ஜூலை 29, 2025 12:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் திரவுபதி அம்மன் கோயில் விழா ஜூலை 25ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அன்று முதல் தினமும் மண்டகப் படிதாரர்களால் பல்வேறு நிகழ்வுகள் நடக்கின்றன. அதன் தொடர்ச்சியாக நேற்று பெத்தார் தேவன் கோட்டை கிராமத்தார்கள் சார்பில் வீமன் வேடமிட்டு இளைஞர்கள் நகர்வலம் வந்தனர்.
இதில் இளைஞர்கள் உடல் முழுவதும் வர்ணம் பூசி வேப்ப மர இலைகளை உடலில் கட்டிக் கொண்டு மேள தாளத்தின் இசைக்கு ஏற்ப ஆடி பக்தர்களை பரவசப்படுத்தினர்.
காலையில் திரவுபதி அம்மன் கோயிலில் இருந்து துவங்கிய நகர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று இரவில் கோயிலில் வந்து நிறைவடைந்தது. பின்னர், மூலவருக்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.