/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உங்கள் ஊரில் உங்கள் எஸ்.பி., திட்ட முகாம்
/
உங்கள் ஊரில் உங்கள் எஸ்.பி., திட்ட முகாம்
ADDED : மே 22, 2025 11:51 PM

கமுதி: கமுதி அருகே தொட்டியபட்டியில் 'உங்கள் ஊரில் உங்கள் எஸ்.பி.,' திட்ட முகாம் நடந்தது. இப்பகுதியில் கிராம மக்களின் நலன் கருதி போலீசுக்கு உதவியாக கிராமம் சார்பில் முக்கிய வீதிகளில் சி.சி.டி.வி., கேமரா அமைக்கப்பட்டது. பின் கண்காணிப்பு கேமரா அறையை எஸ்.பி.,சந்தீஷ் திறந்து வைத்தார்.
அவர் பேசியதாவது:
இந்த திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டவரும் நடவடிக்கைகள் சட்டம் ஒழுங்கு தொடர்பான பிரச்னைகள், போதை பொருட்கள், புகையிலை விற்பனை குறித்த தகவல் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதே போன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் சி.சி.டி.வி., கேமரா அமைக்க விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாகவும் கூறினார்.
முதுகுளத்துார் டி.எஸ்.பி.,சண்முகம், கோவிலாங்குளம் முன்னாள் ஊராட்சி தலைவர் சண்முகநாதன், துணைத் தலைவர் துரைப்பாண்டி, இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் உட்பட மக்கள் பலர் பங்கேற்றனர்.