ADDED : ஜூன் 14, 2026 11:24 PM
அ நிறம் | அளவு
திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது மாணவி ,அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். அவர் பள்ளிக்கு சென்று வரும்போது அதே பகுதியை சேர்ந்த திலக் 23, என்பவர் தொல்லை கொடுத்தார்.
ஜூன் 5ல் வீட்டிற்கு நடந்து சென்றபோது திலக், மாணவியின் கையை பிடித்து இழுத்து, டூவீலரில் ஏறுமாறு வற்புறுத்தி, மிரட்டி அத்துமீறலில் ஈடுபட்டார். மாணவி தப்பி ஓட முயன்றபோது ஆசிட் வீசி கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். திலக்கை 'போக்சோ'வில் திருவாடானை மகளிர் போலீசார் கைது செய்தனர்.
