/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற வாலிபர் கைது
/
பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற வாலிபர் கைது
ADDED : செப் 20, 2024 07:10 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் நுாலகத்தில் பணிபுரியும் பெண் அலுவலரின் செயினை பறிக்க முயன்ற கார்த்திக் 25, கைது செய்யப்பட்டார்.
ஆர்.எஸ்.மங்கலத்தை சேர்ந்த சரவணன் மனைவி ராஜலட்சுமி 38. இவர் ராமநாதபுரம்-மதுரை ரோட்டில் செம்மங்குண்டு ஊருணி அருகே உள்ள அறிவுசார் மையம் நுாலகத்தில் அலுவலராக பணிபுரிகிறார். நேற்று முன்தினம் இரவு 7:30 மணிக்கு நுாலகத்தின் வெளியே நின்று அலைபேசியில் பேசினார்.
அப்போது அங்குவந்த வாலிபர் ராஜலட்சுமியின் செயினை பறிக்க முயன்றார். அவர் கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தினர் வாலிபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் ராமநாதபுரம் கே.கே.நகர் கார்த்திக் 25, என தெரிய வந்துள்ளது. நகர் போலீசார் கைது செய்தனர்.