/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நகை திருட்டு, கடத்தல் வழக்கு; ஆந்திராவில் இளைஞர் கைது
/
நகை திருட்டு, கடத்தல் வழக்கு; ஆந்திராவில் இளைஞர் கைது
நகை திருட்டு, கடத்தல் வழக்கு; ஆந்திராவில் இளைஞர் கைது
நகை திருட்டு, கடத்தல் வழக்கு; ஆந்திராவில் இளைஞர் கைது
ADDED : மே 12, 2025 11:35 PM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் உட்பட பல்வேறு இடங்களில் திருட்டு, புகையிலைகடத்தலில் ஈடுபட்டதாக வேலுாரைச் சேர்ந்த ஷகீல் 38, என்பவரைஆந்திராவில் ராமநாதபுரம் போலீசார்கைது செய்து, 35 கிராம் நகையை பறிமுதல் செய்தனர்.
ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் அமிர்தா நகரில் பாலமுருகன் மனைவி லோகம்மாள் வீட்டில் 5 பவுன் நகை கடந்த மாதம் திருடுபோனது. இந்த வழக்கில் கைரேகைகளை ஒப்பிட்டதில் திருடியவர் வேலுார் சைதாபேட்டையைச் சேர்ந்த அன்வர் மகன் ஷகீல் 38 என தெரியவந்தது.
ஆந்திரா மாநிலம் அலிபிரி போலீஸ் ஸ்டேஷனில் ஒரு வழக்கில் ஷகீல் கைதாகியுள்ளது தெரியவந்தது. இதையடுத்து குற்றப்பிரிவு எஸ்.எஸ்.ஐ., கஜேந்திரா தலைமையிலான போலீசார் ஆந்திராவிற்கு சென்று ஷகீலைகைது செய்து அழைத்து வந்தனர். அவரிடம் இருந்து 35 கிராம் தங்க நகையை பறிமுதல் செய்தனர். ஷகீல் மீது ராமநாதபுரம் மட்டுமன்றி திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட மாவட்டங்களில் நகை திருட்டு, புகையிலை கடத்தல் என 35 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.