/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
/
வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
ADDED : ஜூன் 19, 2025 11:53 PM

ராமநாதபுரம்: உச்சிபுளி அருகே பெருங்குளத்தை சேர்ந்த விஜய் 35, தொடர்ந்து சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தார்.  அவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் போலீசார்  கைது செய்து மதுரையில் மத்திய சிறையில் அடைத்தனர்.
பெருங்குளம் கனகராஜ் மகன் விஜய் 35. இவர் கஞ்சா வைத்திருந்தாக மே 20ல்  உச்சிபுளி போலீசார் கைது செய்தனர்.  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ராமநாதபுரம் சிறையில்  அடைத்திருந்தனர். இவர் மீது கொலை மிரட்டல், கொலை செய்ய முயற்சி உள்ளிட்ட 12 வழக்குகள் உள்ளன.
இந்நிலையில் விஜயை  குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில்  கைது செய்ய எஸ்.பி., சந்தீஷ் பரிந்துரை செய்தார்.
இதையடுத்து  கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவில்  குண்டாசில் விஜயை உச்சிபுளி போலீசார் கைது செய்தனர்.  அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

