ADDED : பிப் 22, 2024 11:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : ராமநாதபுரம் அருகே இந்திரா நகர் முத்துப்பேட்டையை சேர்ந்தவர் முருகன் 43. இவர் தொண்டி, ராமேஸ்வரம், மண்டபம் வழியாக இலங்கைக்கு கஞ்சா மற்றும் போதை பொருட்களை கடத்துவது வழக்கம். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.
நேற்று முன்தினம் மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் திருவாடானை அச்சங்குடி அருகே டூவீலரில் சென்ற இவரை திருவாடானை டி.எஸ்.பி., நிரேஷ், இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டி தலைமையிலான போலீசார் மடக்கி பிடித்தனர்.
அவரை சோதனை செய்த போது பையில் கஞ்சா வைத்திருப்பது தெரிந்தது. இரண்டு கிலோ கஞ்சா மற்றும் டூவீலரை பறிமுதல் செய்து முருகனை கைது செய்தனர்.