ADDED : செப் 25, 2026 05:20 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அண்ணா நகரை சேர்ந்த நாகநாதன் மகன் விக்னேஸ்வரன் 36. தற்போது பட்டணம்காத்தான் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் காந்திநகர் முருகன் வீட்டருகில் மழைக்காக ஒதுங்கியுள்ளார். அப்போது முருகன், அவரது மனைவி காந்தியம்மாள், விக்னேஸ்வரனை மழை பெரிதாக வருவதற்குள் வீட்டிற்கு செல்லுமாறு கூறியுள்ளனர்.
அப்போது விக்னேஸ்வரன் தகராறில் ஈடுபட்டார். ஜாதியை கூறி திட்டி, இரும்பு வாளியால் தாக்கினர். இதில் காந்தியம்மாள் காயமடைந்தார். ராமநாதபுரம் நகர் போலீசார் வன்கொடுமை தடுப்புக்காவல் சட்டத்தில் வழக்குப்பதிந்து விக்னேஸ்வரனை கைது செய்தனர். இதுகுறித்து ஏ.எஸ்.பி., நேகா விசாரிக்கிறார். –––
