sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 பயிற்சி பெற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்

/

 பயிற்சி பெற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்

 பயிற்சி பெற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்

 பயிற்சி பெற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்


ADDED : பிப் 21, 2026 07:00 AM

Google News

ADDED : பிப் 21, 2026 07:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு விமான முன் பதிவு ஆளுமை மற்றும் கேபின் குழு பணியாளர் பயிற்சி அளிக்கப்பட வுள்ளது.

இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்த வர்களாகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். 18 முதல் 35 வயது வரை உள்ளவர் களாகவும், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பயிற்சிக்கான கால அளவு மூன்று மாதங்கள் ஆகும்.

இப்பயிற்சியில் விமான டிக்கெட் முன் பதிவு முறை, வாடிக்கையாளர் சேவை, தொடர்பு திறன், ஆளுமை மேம்பாடு, விமான பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் கேபின் குழு பணிகள் குறித்து தொழில் முறை பயிற்சி திருப்பூர் மாவட்டத்தில் அளிக்கப்படவுள்ளது.

இப்பயிற்சியை முழுமையாக முடித்த இளைஞர்களுக்கு சான்றிதழ் மற்றும் தகுதியுள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பிற்கு வழி வகை செய்யப்படும்.

இப்பயிற்சியை பெற தாட்கோ இணையதள மான www.tahdco.com என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும் திருப்பூரில் உள்ள விடுதியில் தங்கி படிக்கும் வசதி மற்றும் உணவுக்கான செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும், என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us