ADDED : பிப் 05, 2026 05:34 AM
அ நிறம் | அளவு
திருவாடானை: திருவாடானை அருகே செகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகாந்த் 40. இவர் திருப்பூர் பணியன் கம்பெனியில் வேலை பார்த்தார். விஜயகாந்திற்கு குடும்ப ரீதியாக கடன் சுமை ஏற்பட்டது. கடன் பிரச்னையால் மன உளைச்சலில் இருந்த விஜயகாந்த் சில தினங்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான செகுடி கிராமத்திற்குத் திரும்பினார்.
நேற்று வீட்டை விட்டு வெளியேறிய அவர் அங்குள்ள உள்ள காளி கோயில் அருகே மரத்தில் துாக்கிட்டுத் தற்கொலை செய்தார். திருவாடானை போலீசார் விசாரிக்கின்றனர்.
