/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
டூவீலர் மீது லாரி மோதி இளைஞர் பலி: காயம் 2
/
டூவீலர் மீது லாரி மோதி இளைஞர் பலி: காயம் 2
ADDED : ஜன 30, 2025 05:04 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே டூவீலர் மீது லாரி மோதியதில் இளைஞர் பலியானார்.சித்தார்கோட்டை பசும்பொன் நகரை சேர்ந்த முனியசாமி மகன் சதீஷ்குமார் 27. துபாயில் பணிபுரிந்தவர் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார்.
நேற்று முன் தினம் இரவு 10:15 மணிக்குகளரியை சேர்ந்த அண்ணாதுரை, சதீஷ்குமார் ஆகியோர்பட்டணம்காத்தான் மகாத்மா காந்திநகர் பகுதியை சேர்ந்த ரமேஷ் 33, என்பவரை இறக்கி விட டூவீலரில் பேராவூர் கிழக்கு கடற்கரை சாலையில் வந்து கொண்டிருந்தனர்.
டூவீலரை சதீஷ்குமார் ஓட்டினார். அப்போது எதிரே வந்த லாரி திடீரென திரும்பியதால்டூவீலரில் மோதியதில் சதீஷ்குமார், ரமேஷ், அண்ணாதுரை காயமடைந்தனர். மூவரையும் ராமநாதபுரம் அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சதீஷ்குமாரை பரிசோதித்த டாக்டர் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். ரமேஷ், அண்ணாதுரை சிகிச்சையில் உள்ளனர்.