/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சரக்கு வாகனம் மோதியதில் இளைஞர் பலி: 3 பேர் காயம்
/
சரக்கு வாகனம் மோதியதில் இளைஞர் பலி: 3 பேர் காயம்
ADDED : செப் 27, 2025 11:32 PM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கீழத்துாவல் அடுத்த கொளுந்துறை பகுதியை சேர்ந்த முனியசாமி மகன் பார்கவி 24. இவர் வெளிநாட்டில் வேலைக்கு செல்வதற்காக முயற்சி செய்து வந்தார்.
இந்நிலையில் அதே ஊரை சேர்ந்த குமார் மகன் பிரவீன் 29, உடன் தனது டூவீலரில் நேற்று ராமேஸ்வரம் சென்றார். ராமநாத புரம் அடுத்த லாந்தை அருகே காலை 11:00 மணிக்கு சென்றபோது ராமநாதபுரத்தில் இருந்து மதுரை சென்ற மினி சரக்கு வாகனமும் டூவீலரும் நேருக்கு நேர் மோதியது. இதில் டூவீலரை ஓட்டி வந்த பார்கவி சம்பவ இடத்தில் பலியானார்.
டூவீலரில் வந்த பிரவீன், சரக்கு வாகனத்தை ஓட்டிய ராமநாதபுரத்தை சேர்ந்த சுவனேஷ் குமார், அவருடன் வந்த உத்தரகோசமங்கையை சேர்ந்த சுதாகர் காயத்துடன் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ராமநாதபுரம் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.