/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இளைஞர் கொலை: மேலும் 2 பேர் கைது
/
இளைஞர் கொலை: மேலும் 2 பேர் கைது
ADDED : ஜூலை 26, 2025 03:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி:கமுதி அருகே இளைஞர் நல்லுக்குமாரை கொலை செய்த வழக்கில் மணிவண்ணன் 30, பிரித்திவிராஜ் 23, ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் அம்மன்பட்டியை சேர்ந்த நல்லமருது மகன் நல்லுக்குமார் 23. ஜூலை 14ல் கமுதி அருகே மரக்குளம் கருமேனியம்மன் கோயில் பின்புறம் வாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது குறித்து மண்டல மாணிக்கம் போலீசார் விசாரித்தனர்.
இதில் கமுதி கண்ணார்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் 27, கைது செய்யப்பட்டார். மேலும் போலீசார் மரக்குளம் மாரிமுத்து மகன் மணிவண்ணன் 30, அம்மன்பட்டி இளங்கோவன் மகன் பிரித்திவிராஜ் 23, இரண்டு பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து டூவீலரை பறிமுதல் செய்தனர்.