நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: ஆனந்துார் அருகே ராதானுார் மேடாக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் கோபாலகிருஷ்ணன் 24. இவர் சில ஆண்டுகளாக சென்னையில் வேலை செய்துவந்தார்.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ஊர் திரும்பிய கோபாலகிருஷ்ணன், அப்பகுதியில் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். காதலித்த பெண்ணுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சில வாரங்களாக மன உளைச்சலில் இருந்தார்.
இந்நிலையில், அப்பகுதியில் அழகர் கோயில் பகுதியில் மரத்தில் துாக்கிட்டு கோபாலகிருஷ்ணன் தற்கொலை செய்தார். ஆர்.எஸ்.மங்கலம் எஸ்.ஐ., முகமது சைபுல் கிஷன் விசாரிக்கிறார்.