ADDED : செப் 05, 2026 05:34 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அருகே சேதுபதி நகரை சேர்ந்த முருகன் மகன் குணாள் 22.
மகாராஷ்டிரா மாநிலத்தில் புரோட்டா மாஸ்டராக பணிபுரிந்தார். சமீபத்தில் விடுமுறையில் ஊருக்கு வந்தார். நேற்று முன்தினம் இரவு நண்பர்களுடன் மது அருந்திவிட்டு நகராட்சி சமுதாயக்கூடம் வாசலில் படுத்திருந்தார். நேற்று காலை அங்கிருந்தவர்கள் அவரை எழுப்ப முயன்ற போது இறந்தது தெரியவந்தது. குணாள் தாய் முனிஸ்வரி அளித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் பஜார் போலீசார் விசாரிக்கின்றனர்.
