/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு அக்.9ல் மண்டல வேலைவாய்ப்பு முகாம்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு அக்.9ல் மண்டல வேலைவாய்ப்பு முகாம்
மாற்றுத்திறனாளிகளுக்கு அக்.9ல் மண்டல வேலைவாய்ப்பு முகாம்
மாற்றுத்திறனாளிகளுக்கு அக்.9ல் மண்டல வேலைவாய்ப்பு முகாம்
ADDED : அக் 04, 2024 04:25 AM
ராமநாதபுரம்: மண்டல அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் அக்.9ல் மதுரையில் நடக்கிறது.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மகளிர் மேம்பாட்டுத் திட்ட அலுவலகம் ஒருங்கிணைத்துமாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் பொருட்டு மண்டல அளவில் வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது.
அக்.9ல் காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை மதுரை அமெரிக்கன் கல்லுாரி வளாகத்தில் நடக்கிறது.
ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை, திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மண்டல அளவில் தனியார் வேலை வாய்ப்பு வழங்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விருப்பம் உள்ள மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, கல்விச்சான்று நகல்கள், போட்டோ, சுயவிபரம் குறிப்பு ஆகியவற்றுடன் முகாம் நடக்கும் நாளில் நேரில் பதிவு செய்து பயன்பெறலாம்.
விபரங்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக தொலைபேசி எண் 04567--231 410-ல் தொடர்பு கொள்ளலாம்.

