ADDED : ஏப் 12, 2025 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மின்சாரம் தாக்கி விவசாயி பலி
ராணிப்பேட்டை, ராணிப்பேட்டை அருகே, நிலத்திற்கு நீர் பாய்ச்ச சென்ற விவசாயி, மின்சாரம் தாக்கி பலியானார்.
ராணிப்பேட்டை அடுத்த தெங்கால் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சேகர், 46. இவருக்கு சொந்தமான அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு, நேற்று அதிகாலை நீர் பாய்ச்ச சென்றார்.
அப்போது, விவசாய பம்பு செட்டில் மின் மோட்டாருக்கு செல்லும், பீஸ் கேரியரில் பழுது ஏற்பட்டிருந்ததால், அதை சரி செய்து மீண்டும் பீஸ் கேரியரை பொருத்தினார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில், சம்பவ இடத்திலேயே பலியானார்.
சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

