/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
தண்டவாளத்தில் கம்பி வைத்த 'தம்பி' கைது
/
தண்டவாளத்தில் கம்பி வைத்த 'தம்பி' கைது
ADDED : ஆக 25, 2024 07:30 AM
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே, தண்டவாளத்தில் இரும்பு கம்பி வைத்த வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.
ராணிப்பேட்டை மவாட்டம், முகுந்தராயபுரம் ரயில்வே ஸ்டேஷன் அருகே, 500 மீட்டர் தொலைவில், சென்னை - பெங்களூரு ரயில்வே தண்டவாளத்தில் கடந்த, 17ம் தேதி மாலை திடீரென சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதை பார்த்த ரயில்வே நிலைய மேலாளர் சிக்னல் துண்டிப்புக்கான காரணம் குறித்து ஆய்வு செய்தார். அப்போது தண்டவாளத்தில், 9 அடி நீள இரும்பு கம்பி இருப்பதை கண்டறிந்தார்.
இதேபோல் பெங்களூரு - சென்னை தண்டவாளத்தில் பெயின்ட் டப்பா மற்றும் கல் இருப்பதை பார்த்து அகற்றினார். சரியான நேரத்தில் கண்டறியப்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. குற்றவாளியை பிடிக்க சேலம் ரயில்வே டி.எஸ்.பி., பெரியசாமி தலைமையில், காட்பாடி ரயில்வே போலீசாரும் இணைந்து விசாரித்தனர். ராணிப்பேட்டையை சேர்ந்த நவீன்குமார், 21, இதில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரை நேற்று முன்தினம் மாலை கைது செய்தனர்.