/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
விவசாயியை கொன்ற தொழிலாளி பழிக்கு பழியாக வெட்டி கொலை
/
விவசாயியை கொன்ற தொழிலாளி பழிக்கு பழியாக வெட்டி கொலை
விவசாயியை கொன்ற தொழிலாளி பழிக்கு பழியாக வெட்டி கொலை
விவசாயியை கொன்ற தொழிலாளி பழிக்கு பழியாக வெட்டி கொலை
ADDED : செப் 08, 2024 07:48 AM
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே நிலத்தகராறில், விவசாயியை கொன்ற தொழிலாளியை, பழிக்குப் பழியாக வெட்டி கொன்ற தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த கிழவனம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி, 70; இவரது மகன் பாஸ்கர்; இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சந்திரனுக்கும் நிலப்பிரச்னை இருந்தது. ஓராண்டுக்கு முன் ஏற்பட்ட தகராறில் பாஸ்கரனை, சந்திரன் வெட்டி கொன்றார். அரக்கோணம் தாலுகா போலீசார், விசாரித்து வந்த நிலையில், சோளிங்கர்
அருகே மாமியார் வீட்டில் சந்திரன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் கிழவனம் பகுதிக்கு சந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் வந்தபோது, இறந்த பாஸ்கரனின் தம்பி எத்திராஜ், 40, அவரது தந்தை சுப்பிரமணி மற்றும் சிலர், சந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் தகராறில் ஈடுபட்டு, சந்திரனை கல்லால் தாக்கியும், கத்தியாலும் வெட்டினர். இதில் சந்திரன் சம்பவ இடத்தில் பலியானார். அரக்கோணம் தாலுகா போலீசார், சுப்பிரமணி மற்றும் எத்திராஜை கைது செய்தனர். தப்பிய மூன்று பேரை தேடி வருகின்றனர்.