/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
கடற்படை வீரர்கள் சைக்கிள் பேரணி
/
கடற்படை வீரர்கள் சைக்கிள் பேரணி
ADDED : ஆக 05, 2024 02:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரக்கோணம்:ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் ஐ.என்.எஸ்., ராஜாளி கடற்படை விமான தளம் இயங்கி வருகிறது.
இங்கிருந்து ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் அமைந்துள்ள கிழக்கு பிராந்திய கடற்படை தலைமையகம் வரை சைக்கிள் பேரணியாக செல்ல கடற்படை விமான தள வீரர்கள் திட்டமிட்டனர். 800 கி.மீ., தூரம் கொண்ட இந்த பேரணியில் 25 வீரர்கள் பங்கேற்றனர்.
ஆகஸ்ட் 15ம் தேதி கிழக்கு பிரந்திய கடற்படை தலைமையகம் அமைந்துள்ள விசாகப்பட்டினத்தை சென்றடைவர்.
சைக்கிள் பேரணியை நேற்று காலை, 7:00 மணிக்கு அரக்கோணம் ராஜாளி கடற்படை விமான தள கமோடர் கபில் மேத்தா, பாதுகாப்பு துறையின் சென்னை கணக்கியல் பிரிவு அலுவலர் ஜெயசீலன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.