/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
குட்டையில் மூழ்கி 2 குழந்தைகள் பலி
/
குட்டையில் மூழ்கி 2 குழந்தைகள் பலி
ADDED : ஜூலை 04, 2024 11:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரக்கோணம்:ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த சித்தாம்பாடி பஞ்., ராமபுரத்தை சேர்ந்த, விநாயகம் என்பவரின் மகள் பவித்ரா, 5, மற்றும் ராஜேஷ் என்பவரின் மகன் குணா, 5. இருவரும் நேற்று மாலை, வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தனர்.
உறவினர்கள் தேடியபோது, இருவரையும் காணவில்லை. தேடியபோது, அருகிலுள்ள குட்டை நீரில் மூழ்கி தத்தளித்து கொண்டிருந்தனர்.
அவர்களை மீட்டு, மருத்துவமனைக்கு துாக்கி செல்லும் வழியில் இருவரும் உயிரிழந்தனர்.