/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
ரயிலில் கடத்த இருந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
/
ரயிலில் கடத்த இருந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
ADDED : மே 30, 2024 10:03 PM
அரக்கோணம்,:அரக்கோணம் ரயில் நிலையம் வழியாக வெளி மாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் ரேஷன் அரிசி கடத்துவதை தடுக்கும் விதமாக அரக்கோணம் ரயில்வே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு ரயில்களில் சோதனை செய்து வருகின்றனர்.
நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டபோது அரக்கோணத்தில் இருந்து கடப்பா வரை செல்லும் ரயில் மற்றும் சென்னையில் இருந்து திருப்பதி வரை செல்லும் மெமு ரயில்களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ரயில் பெட்டியின் இருக்கை கீழ் மறைத்து வைத்திருந்த 36 மூட்டைகளில் இருந்த 1,000 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து பறக்கும் படை தாசில்தார் நடராஜனிடம் ஒப்படைத்தனர்.
நேற்று முன்தினம் பிளாட்பாரம் அருகே 40 மூட்டைகளில் மறைத்து வைத்திருந்த 1 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த ரேஷன் அரிசியை தாசில்தார் நடராஜன் அரக்கோணம் நுகர்பொருள் வாணிப கழகத்தில் ஒப்படைத்தார்.