ADDED : ஜூலை 12, 2024 10:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரக்கோணம்:அரக்கோணம் ரயில் நிலையத்தில் நேற்று ரயில்வே எஸ்.ஐ., சுந்தரராஜன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது 3ம் நடைமேடையில் சென்னையில் இருந்து அரக்கோணம் வந்த புறநகர் ரயிலில் சோதனை செய்தனர்.
அப்போது ரயில் பெட்டியின் இருக்கைக்கு கீழ் மறைத்து வைத்திருந்த, 32 பைகளில் இருந்த 600 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.