/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் 7 குழுவாக கேரளாவுக்கு பயணம்
/
தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் 7 குழுவாக கேரளாவுக்கு பயணம்
தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் 7 குழுவாக கேரளாவுக்கு பயணம்
தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் 7 குழுவாக கேரளாவுக்கு பயணம்
ADDED : ஜூன் 21, 2024 01:25 AM

அரக்கோணம்:கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவ மழையால், அங்குள்ள சில மாவட்டங்களில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.
இதனால் கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் வேண்டுகோளுக்கு இணங்க கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம், இடுக்கி, மலப்புரம் மற்றும் கோழிக்கோடு ஆகிய 7 மாவட்டங்களுக்கு பருவ மழை முன் எச்சரிக்கை மீட்பு பணியில் ஈடுபடுவதற்காக ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை துணை கமாண்டன்ட் சங்கர் பாண்டியன் தலைமையில் 7 குழுக்கள் நேற்று தனித்தனி வாகனங்கள் மூலம் புறப்பட்டனர்.
ஒவ்வொரு குழுவிலும், 30 பேர் வீதம், 210 வீரர்கள் மருத்துவ முதலுதவி சிகிச்சை சாதனங்கள், நவீன தொலை தொடர்பு சாதனங்கள் உட்பட அதிநவீன மீட்புப் கருவிகளுடன் மீட்புப் படை வாகனத்தில் சென்றனர்.