/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
சூளையில் வேலை 8 சிறுவர்கள் மீட்பு
/
சூளையில் வேலை 8 சிறுவர்கள் மீட்பு
ADDED : பிப் 22, 2025 01:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அடுத்த அனந்தலை கிராமத்தில் உள்ள செங்கல் சூளையில், பெற்றோருடன் தங்கி, சிறார்கள் வேலை செய்து வருவதாக கலெக்டர் சந்திரகலாவிற்கு புகார் சென்றது.
வாலாஜா தாசில்தார் அருள்செல்வம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மைய மற்றும் 1098 உதவி மைய அதிகாரிகள், நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு, புகாருக்குள்ளான செங்கல் சூளையில் ஆய்வு செய்தனர்.
அப்போது, அங்கிருந்த நான்கு சிறுவர், நான்கு சிறுமியர் என, எட்டு பேர் பணியில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது. அவர்களை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

