/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
ஓய்வெடுத்த தொழிலாளி மீது ரோடு ரோலர் ஏறி நசுங்கி பலி
/
ஓய்வெடுத்த தொழிலாளி மீது ரோடு ரோலர் ஏறி நசுங்கி பலி
ஓய்வெடுத்த தொழிலாளி மீது ரோடு ரோலர் ஏறி நசுங்கி பலி
ஓய்வெடுத்த தொழிலாளி மீது ரோடு ரோலர் ஏறி நசுங்கி பலி
ADDED : ஜூலை 06, 2024 11:37 PM
பானாவரம்:சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து, ஆந்திர மாநிலம் வழியாக கர்நாடக மாநிலம் ஒசக்கோட்டை வரை, விரைவுச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில், ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவாரம் வழியாக இச்சாலை செல்வதால், இப்பகுதியில் பல்வேறு இடங்களில் பணிகள் நடந்து வருகின்றன. பாணாவரம் அடுத்த ரங்காபுரம் அருகே விரைவு சாலை பணியில் ஈடுபட்டிருந்த மத்திய பிரதேச மாநிலம், ஆனந்த் நகரை சேர்ந்த ராஜாநாயக், 25, நேற்று காலை சாப்பிட்டு விட்டு, சிறிது நேரம் ஓய்வுவெடுக்க ரோடு ரோலர் முன் அமர்ந்துள்ளார்.
இதை கவனிக்காமல், மண்ணை சமன்படுத்துவதற்காக, டில்லி, சோனி மர்ம போஸ்ட் தானரசம் பகுதியை சேர்ந்த பைரவா சவுத்ரி, ரோடு ரோலரை இயக்கிய போது, அங்கு அமர்ந்திருந்த ராஜாநாயக் மீது ரோடு ரோலர் ஏறி, உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். பானாவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.