/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
சோளிங்கர் பெருமாள் கோவிலில் ஆடி பூரம் உற்சவம்
/
சோளிங்கர் பெருமாள் கோவிலில் ஆடி பூரம் உற்சவம்
ADDED : ஆக 04, 2024 02:19 AM

சோளிங்கர்:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில் யோக நரசிம்மரின் உற்சவரான பக்தோசித பெருமாள் கோவில், உள்ளது.
இந்த கோவிலில், நித்திய வழிபாடுகளுடன் பிரம்மோற்சவம், தனுர்மாத பூஜை உள்ளிட்ட வைபவங்கள் நடந்து வருகின்றன. ஆடி மாதத்தில் பூரம் உற்சவமும் கொண்டாடப்பட்டு வருகிறது.
கடந்த 29ம் தேதி முதல் தினசரி நடந்து வரும் இந்த உற்சவத்தில் ஆண்டாள் நாச்சியார் வீதியுலா எழுந்தருளி வருகிறார்.
நேற்றும் வேதமந்திரங்கள் முழங்க, ஆண்டாள் புறப்பாடு நடந்தது. திரளான பக்தர்கள் உடன் வலம் வந்தனர். வீதியுலா எழுந்தருளிய ஆண்டாள் நாச்சியாருக்கு ராஜகோபுரம் மற்றும் நான்கு கால் மண்டபம் அருகே பாசுரங்கள் பாடப்பட்டன. வரும் 7 ம் தேதி வரை ஆடி பூரம் உற்சவம் நடைபெற உள்ளது.