/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
ஆர்.பி.எப்., வீரர் மீது கல்வீச்சு அரக்கோணம் வாலிபர் கைது
/
ஆர்.பி.எப்., வீரர் மீது கல்வீச்சு அரக்கோணம் வாலிபர் கைது
ஆர்.பி.எப்., வீரர் மீது கல்வீச்சு அரக்கோணம் வாலிபர் கைது
ஆர்.பி.எப்., வீரர் மீது கல்வீச்சு அரக்கோணம் வாலிபர் கைது
ADDED : செப் 12, 2024 02:36 AM

அரக்கோணம்:பெங்களூரு --- சென்னை வரை செல்லும் பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று முன்தினம் இரவு புறப்பட்டு, சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. நள்ளிரவு காட்பாடி அருகே வந்த போது, பொது பெட்டியில் இருந்த சிலர் பயணியருக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், வாத்தியம் இசைத்து பாட்டு பாடியப்படி வந்தனர்.
இதை, பெட்டியில் இருந்த பயணியர் தட்டி கேட்டனர். இதனால், இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. நேற்று அதிகாலை 3:00 மணிக்கு அரக்கோணம் ரயில் நிலையம் வந்தடைந்தது.
அப்போது, பிளாட்பாரத்தில் ரோந்து பணியில் இருந்த பாதுகாப்பு படை போலீசார், பயணியரிடம் தகராறு செய்த ஐந்து இளைஞர்களை பிடித்து விசாரித்தனர்.
அப்போது, திடீரென ஒரு இளைஞர் அங்கிருந்து தப்பியோடினார். உடனே பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் பாப்புன் சவுகான், 34, என்பவர், அந்த இளைஞரை விரட்டி சென்றார்.
அந்த இளைஞர் தண்டவாள பகுதியில் இருந்த ஜல்லி கற்களை எடுத்து பாப்புன் சவுகான் மீது வீசினார்.
இதில், அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்து, அவரை விரட்டி சென்று பிடித்து ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
விசாரணையில், அரக்கோணம் அடுத்த புளியமங்கலம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ், 26, என்பது தெரியவந்தது. பிரகாஷை கைது செய்த போலீசார் விசாரிக்கின்றனர். மற்ற நால்வரை எச்சரித்து அனுப்பினர்.
அதன்பின், ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் பாப்புன் சவுகான், சிகிச்சைக்காக அரக்கோணம் ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.