/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
ரூ.46.31 லட்சம் முறைகேடு கூட்டுறவு சங்க செயலர் கைது
/
ரூ.46.31 லட்சம் முறைகேடு கூட்டுறவு சங்க செயலர் கைது
ரூ.46.31 லட்சம் முறைகேடு கூட்டுறவு சங்க செயலர் கைது
ரூ.46.31 லட்சம் முறைகேடு கூட்டுறவு சங்க செயலர் கைது
ADDED : ஆக 22, 2024 01:57 AM
ஆற்காடு:ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த தாமரைப்பாக்கம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில், கடந்த, 2019 ஏப்., 1 முதல், 2021 மார்ச், 31, வரையிலான சங்க செயல்பாடுகள் குறித்து, 2021ல் கூட்டுறவு சங்க அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
அதில், கூட்டுறவு சங்கத் தலைவராக இருந்த, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த கிருஷ்ணன், 50, செயலர் செல்வராசு, 41, ஆகியோர், சங்கத்தின் வங்கி கணக்கிலிருந்து, 46.31 லட்சம் ரூபாயை மோசடி செய்து, முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
வேலுார் வணிக குற்றப் புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது.
அதன்படி போலீசார் விசாரணை நடத்தி, நேற்று முன்தினம் இரவு செயலர் செல்வராசுவை கைது செய்தனர். தலைமறைவான தலைவர் கிருஷ்ணனை தேடி வருகின்றனர்.