/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
சோளிங்கர் மலையில் பக்தர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு
/
சோளிங்கர் மலையில் பக்தர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு
சோளிங்கர் மலையில் பக்தர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு
சோளிங்கர் மலையில் பக்தர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு
ADDED : மே 03, 2024 02:40 AM
ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில், 750 அடி உயர மலை உச்சியில், யோகலட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இக்கோவிலிற்கு, 1,305 படிகள் ஏறி செல்ல வேண்டும். இங்கு, தினமும் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் நிலையில், முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறு குழந்தைகளுடன் வரும் பெற்றோருக்காக மலை மீது சென்று சுவாமி தரிசனம் செய்ய வசதியாக, மார்ச், 8ல் ரோப் கார் வசதி தொடங்கப்பட்டது.
தினமும், 1,000 பக்தர்கள் வரை இதில் சென்று சுவாமி தரிசனம் செய்து வரும் நிலையில், பராமரிப்புக்காக நேற்று முதல், நாளை வரை, 3 நாட்கள், ரோப் கார் இயங்காது என, கோவில் நிர்வாகம் அறிவித்தது.
இந்நிலையில், பெங்களூருவை சேர்ந்த முத்துக்குமார், 47, சுவாமி தரிசனம் செய்ய, படி வழியாக நேற்று மதியம், 12:00 மணிக்கு நடந்து சென்றார். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அவர் ஏறிய போது, 1,200வது படியில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு, சுருண்டு மயங்கி விழுந்தார்.
அங்கிருந்த பக்தர்கள் அவரை மீட்டு, சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
சோளிங்கர் போலீசார் விசாரிக்கின்றனர்.