/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
தமிழ் பாடத்தில் தோல்வி பிளஸ் 1 மாணவி தற்கொலை
/
தமிழ் பாடத்தில் தோல்வி பிளஸ் 1 மாணவி தற்கொலை
ADDED : மே 16, 2024 02:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராணிப்பேட்டை:பிளஸ் 1 தேர்வு தமிழ் பாடத்தில் தோல்வியால், மாணவி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன், 46, கட்டட மேஸ்திரி; இவரது மகள் யமுனா, 16; இவர், அப்பகுதியிலுள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 1 படித்து வந்தார். நேற்று முன்தினம் தேர்வு முடிவு வெளியானதில், தமிழ் பாடத்தில், 29 மதிப்பெண் பெற்று தோல்வி அடைந்தார். மனமுடைந்த மாணவி நேற்று முன்தினம் மாலை வீட்டில், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ராணிப்பேட்டை சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.