/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
ரயிலில் பெண்ணுக்கு தொல்லை வடமாநில இளைஞர் நால்வர் கைது
/
ரயிலில் பெண்ணுக்கு தொல்லை வடமாநில இளைஞர் நால்வர் கைது
ரயிலில் பெண்ணுக்கு தொல்லை வடமாநில இளைஞர் நால்வர் கைது
ரயிலில் பெண்ணுக்கு தொல்லை வடமாநில இளைஞர் நால்வர் கைது
ADDED : செப் 05, 2024 02:33 AM
அரக்கோணம்:அசாம் மாநிலம் கவுஹாத்தியில் இருந்து, பெங்களூரு வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில், மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தைச் சேர்ந்த, 19 வயது பெண், தன் உறவினரான மற்றொரு பெண்ணுடன் நேற்று முன்தினம் பொதுபெட்டியில் பயணித்தார்.
பீஹார் மாநிலம் கிஷான்கஞ்ச் நிலையத்திற்கு ரயில் வந்த போது, நான்கு வாலிபர்கள், அதே பெட்டியில் ஏறினர்.
அப்போது, வாலிபர்களுக்கும், இரு பெண்களுக்கும் இடையே இருக்கை பிடிப்பதில் தகராறு ஏற்பட்டது.
பின், வாலிபர்கள் நான்கு பேரும், இரு பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே ரயில் அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு வந்த போது, ரயில்வே போலீசார், பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த மூவர் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் உள்ளிட்ட நால்வரை கைது செய்து, வேலுார் சிறையில் அடைத்தனர்.