/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
காஸ் சிலிண்டர் கசிந்து தீ விபத்து மூதாட்டி உட்பட மூவர் படுகாயம்
/
காஸ் சிலிண்டர் கசிந்து தீ விபத்து மூதாட்டி உட்பட மூவர் படுகாயம்
காஸ் சிலிண்டர் கசிந்து தீ விபத்து மூதாட்டி உட்பட மூவர் படுகாயம்
காஸ் சிலிண்டர் கசிந்து தீ விபத்து மூதாட்டி உட்பட மூவர் படுகாயம்
ADDED : செப் 13, 2024 09:43 PM
அரக்கோணம்:ராணிபேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த மூதுார் பெரிய தெருவை சேர்ந்த தேவன், 45. இவர் வீட்டின் அருகிலேயே இ--- சேவை மையம் நடத்தி வருகிறார்.
நேற்று காலை தேவனின் தாய் சின்ன குழந்தை, 70. வீட்டின் சமையலறையில் காஸ் அடுப்பு பற்ற வைத்த போது சிலிண்டர் இணைப்பு ரப்பர் டியூபில் ஏற்பட்ட கசிவால் திடீரென தீ பற்றியது.
இதில் சின்ன குழந்தை மீது தீ பரவியதை கண்ட தேவன் மற்றும் பேத்தி துளசி தீயை அணைக்க முற்பட்டனர்.
அப்போது மூவரும் தீக்காயம் அடைந்தனர். தகவல் அறிந்து வந்த அரக்கோணம் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.
மூவரையும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் வாயிலாக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.