ADDED : ஆக 23, 2024 02:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் அடுத்த நல்லுார்பேட்டையில் மதனாந்தக நல்லீஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவிலில், நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல பூஜை முடிந்து, நடை சாத்தப்பட்டு, கோவில் பூட்டப்பட்டது.
நேற்று காலை கோவிலை திறந்தபோது, மூலவர் நல்லீஸ்வரர் கோபுரத்தின் கலசம் திருடு போனது தெரிந்தது.
பழமையான கோவிலில் கலசம் திருடப்பட்டது குறித்து, நெமிலி போலீசார் விசாரிக்கின்றனர்.

